search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல்"

    • 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
    • சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.

    அந்தந்த பகுதிகளுக்ககு உட்பட்ட பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதியேற்ற நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 46,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 31,279 மனுக்கள் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் ஆவர். அவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளனர்.

    657 பேரின் பெயரை நீக்கவும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக 14,231 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 3,531 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் 3,187 பேர் மனு கொடுத்தனர்.

    சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

    • 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
    • சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28-ந்தேதி வரை காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயர் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பதை சரிபார்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) மற்றும் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2007-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.

    பெயர் நீக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும்.

    சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28-ந்தேதி வரை காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
    • ஒரு நபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வலியுறுத்துங்கள்.

    சென்னை:

    புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர்களின் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பொது மக்களின் தேவையறிந்து தமிழக வெற்றிக்கழகத்தினர் செயல்பட உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி இருக்கிறது.

    இது தொடர்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக விஜய் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்தான் நாம் சந்திக்கும் முதல் தேர்தல். எனவே இந்த முதல் தேர்தலையே சவாலாக எடுத்துக்கொண்டு, நாம் தீர்மானித்த இடத்திற்கு வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நீக்குங்கள். அவர்களுக்கு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் எதுவென்றாலும் முன் நின்று உதவுங்கள் என்று கூறியிருக்கிறார்.

    மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்கள், புதிதாக குடிவந்துள்ளவர்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒரு நபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வலியுறுத்துங்கள்.

    நீங்கள் இருக்கும் பூத் பகுதியை விட்டு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரையுங்கள். இதற்கு உரிய படிவத்தை பெற்று பூர்த்திசெய்து, தொடர்புடைய முகாம்களில் வழங்குங்கள். இந்த பணிகளை செய்ய இப்போதே தயாராகி கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, பூத் கமிட்டி, வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் தொடர்பாக நிர்வாகிகளிடம் மாவட்டம் வாரியாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    • வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது.
    • 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    சென்னை:

    புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வாக்காளர் பட்டியல்கள் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலா 2 நகல்கள் வழங்கப்படும்.

    இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 பேர் ஆவார்கள்.

    பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பேர் உள்ளனர். 3-ம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 964 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பெரிய சட்டசபை தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் மிகக்குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள கீழ் வேளுர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

    வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    நவம்பர் மாதம் 16, 17, 23, 24 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

    இந்த திருத்தங்களை செய்ய உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான விண்ணப்ப படிவங்களை கொடுக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், விவசாயி புத்தகம், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்தலாம்.

    வயதுக்கு சான்றளிப்பதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் படங்களை வாக்காளர்கள் அளிக்க வேண்டும்.

    வெளிநாட்டில் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். தபாலில் அனுப்பும் பட்சத்தில் பாஸ்போர்ட்டின் நகலை கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்.

    ஒருவர் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாறினால் படிவம் 8ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். படிவம் 6 புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவம் ஆகும்.

    படிவம் 6 பி என்பது வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றளிக்கும் படிவமாகும். படிவம் 7ஐ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது.

    தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆக. 20-ந் தேதி முதல் அக். 18-ந் தேதி வரை மேற்கொள்கின்றனா்.
    • வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

    சென்னை:

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி ஒவ்வோா் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிக்கான கால நிா்ணய அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 29-ந் தேதிமுதல் நவ. 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளா்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆக. 20-ந் தேதி முதல் அக். 18-ந் தேதி வரை மேற்கொள்கின்றனா்.

    அதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

    இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக அக். 29-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
    • இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவரும், பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

    அவருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    இந்த பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இப்பணியில் அனைத்து நிலைகளிலும் வாக்கா ளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழி வகை உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொது மக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

    எளியமுறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலைரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.
    • வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.

    கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்களே?

    ப:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    கே:- வாக்காளர் பட்டியலில் நிறையபேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்களே?

    ப:- ஆமாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.

    தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.

    ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன்.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள். இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
    • அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், சர்கார் பட பாணியை தழுவும் சம்பவம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றுள்ளது.

    சென்னையை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர் பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்துள்ளார்.

    இதையடுத்து இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    • மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
    • அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-ஐதராபாத் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.

    4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் உள்ளதால் வாக்கு சதவீதம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் தவறாக இருந்தது. அவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×